1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2019 (08:26 IST)

வசமாக சிக்கிய கவின்: நூலிழையில் தப்பித்த லாஸ்லியா!

பிக்பாஸ் வீட்டில் முதல் நாளிலிருந்து பிளேபாயாக வலம் வந்து கொண்டிருந்த கவின் கடந்த சில நாட்களாக அதிக நபர்களால் வெறுக்கப்படும் நபராக உள்ளார். குறிப்பாக சாக்சி, ரேஷ்மா லாஸ்லியா, ஷெரின் ஆகிய பெண் போட்டியாளர்கள் கவினை தற்போது வெறுத்து வருகின்றனர்
 
அதேபோல் பார்வையாளர்களின் கோபத்திற்கும் கவின் ஆளாகியுள்ளார். சாக்சி மீது அவர் காட்டிய கோபமே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய நாமினேஷன் படலத்தில் கவின் வசமாக சிக்கினார். கவினை சாக்சி, மதுமிதா, ரேஷ்மா, சேரன் அபிராமி ஆகிய 5 பேர் நாமினேஷன் செய்துள்ளனர் 
 
அதேபோல் மதுமிதாவை லாஸ்லியா, கவின்,  ரேஷ்மா, முகின், அபிராமி, தர்ஷன் ஆகியோர் நாமினேட் செய்துள்ளனர்.  சாண்டி மீது மதுமிதா காட்டிய கோபம் காரணமாக அவரை பலர் கற்கத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கவின், மதுமிதா தவிர ரேஷ்மா, சாக்சி, அபிராமி ஆகியோர்களும் செய்யப்பட்டுள்ளனர். முதன்முதலாக நாமினேட் செய்யப்பட்டாலும் லாஸ்லியாவை ஷெரின் ஒருவர் மட்டுமே நாமினேட் செய்துள்ளதால் அவர் நாமினேஷன் பட்டியலில் சிக்காமல் நூலிலையில் தப்பித்துவிட்டார்
 
அதேபோல் வழக்கம்போல் சாண்டி, முகின் ஆகியோர்களை யாரும் நாமினேட் செய்யவில்லை என்பதும் வீட்டின் தலைவர் என்பதால் தர்ஷனும் நாமினேஷனில் இருந்து தப்பி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக நாமினேட் செய்யப்பட்டு வந்த சேரன், சரவணன் ஆகியோர் இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த வாரம் வெளியேற்றப்படும் நபர் யாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் கவின், மதுமிதா ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது