செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 மே 2020 (08:25 IST)

முதல்முறையாக என் கணக்கு தப்பாய் போய்விட்டது: நடிகை கஸ்தூரி

நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தைரியமான சமூக கருத்துக்களை தெரிவித்து வருவார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று முதல் மூன்றாம் கட்ட ஊரடங்கு ஆரம்பமாகும் நிலையில் பல கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தியுள்ளது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் 
 
குறிப்பாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பது இல்லை என்ற முடிவை எடுத்துள்ள அரசுக்கு தனது நன்றியை தெரிவித்து உள்ளார். இந்த விஷயத்தில் தனது கணக்கு தப்பாகி போய்விட்டது என்றும் இருப்பினும் தனது கணக்கு முதல்முறையாக தப்பாய் போனது ரொம்ப மகிழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் அவர் இதுகுறித்து கூறியதாவது:
 
டாஸ்மாக்கை இப்போது திறப்பதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி. நானும் கூட கண்டிப்பாக திறப்பார்கள் என்றே எண்ணினேன். என் கணக்கு தப்பாய் போனதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. தாய்மார்கள், குழந்தைகள் சார்பாக மீண்டும் நன்றி 
 
புதுச்சேரி முழுதும் green/ orange zone என்ற நிலையிலும், மது விற்பனை இல்லை என்ற முடிவெடுத்துள்ள புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்களுக்கு நன்றி. பொறுப்பான முடிவு. தமிழகத்திலிருந்து பலரும் காரைக்காலுக்கும் பாண்டிச்சேரிக்கும் படையெடுத்து தொற்று பரப்பும் அபாயத்தை முளையிலேயே கிள்ளி விட்டார்’
 
கஸ்தூரியின் இந்த இரண்டு டுவிட்டுக்களும் தற்போது வைரலாகி வருகிறது