செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: ஞாயிறு, 3 மே 2020 (11:09 IST)

இது லெட்டர் சீ மடல் இல்லை கடுதாசின்னு வச்சுப்போமா? கமல்ஹாசனை கலாய்த்த கஸ்தூரி !!

பிரபல நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசனின் கவிதையைக் கலாய்த்து ஒரு டுவிட் பதிவிட்டுள்ளார்.

நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் , ‘’ஊரடங்கும் உயிருக்கு பயந்து - பிணி உமக்கடங்காது புரிந்து கொள்வீர். தண்ணீர்க்கடங்கா நெருப்பு இது. நீர், போதாதிதற்குயாமும் வேண்டும். மக்களைக் காக்க மக்களே மருந்து. மனம் மாறு, அரசே மதம் மாறவல்ல எம் கட்டளை மனிதனை நேசிக்க வேண்டுகோள் மக்கள் நீதி மய்யம்’’ என ஒரு கவிதை பதிவிட்டிருந்தார்.

இதனை டேக் செய்த நடிகை கஸ்தூரி, இது லெட்டர் சீ மடல் இல்லை கடுதாசின்னு வச்சுப்போமா? வேண்டாம் கடிதமே இருக்கட்டும் . இலக்கணப்படி இந்த கவிதை எந்த வகை? என கேள்வி எழிப்பியுள்ளார்.