நடிகர் கார்த்திக் குமாருக்கு இரண்டாவது திருமணம்… வெளியான புகைப்படம்!
நடிகரும் ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமார் அம்ருதா சீனிவாசனை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்தவர் கார்த்திக் குமார். ஆனாலும் அவரால் பெரிய நட்சத்திரமாக வர முடியவில்லை. அதனால் ஸ்டாண்ட் அப் காமெடி பக்கம் ஒதுங்கி அங்கு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். இவர் ஏற்கனவே பாடகி சுசித்ராவை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்திருந்தார்.
இந்நிலையில் இப்போது நடிகையை அம்ருதா சீனிவாசனை மறுமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணம் சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.