திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 டிசம்பர் 2021 (15:05 IST)

ஓ சொல்றியா மாமா பாடலை கொண்டாடுகின்றனர்! – பாடலாசிரியர் விவேகா!

புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள ஓ சொல்றியா மாமா பாடல் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் அதுகுறித்து பாடலாசிரியர் விவேகா கருத்து தெரிவித்துள்ளார்.

தெலுங்கு ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து சுகுமார் இயக்கியுள்ள படம் புஷ்பா. செம்மர கடத்தலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் சில முன்னதாக வெளியாகி வைரலானது.

அதை தொடர்ந்து நேற்று இந்த படத்தின் ஐட்டம் பாடலான ஒ சொல்வியா மாமா என்ற பாடல் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகியது. இந்த பாடலில் சமந்தா டான்ஸ் ஆடியுள்ள நிலையில் சமந்தாவின் புகைப்படங்களை இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தமிழில் இந்த பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார்.

இந்நிலையில் இந்த பாடல் ஆண்களை கீழ்தரமாக சித்தரிப்பதாக உள்ளதாக கூறி ஆந்திராவில் சிலர் இந்த பாடலை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பாடலின் தமிழ் வெர்சனிலும் அவ்வாறான வாக்கியங்கள் உள்ளதால் பாடலுக்கு பலர் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் இந்த பாடலுக்கு தமிழில் வரிகள் எழுதிய பாடலாசிரியர் விவேகா பாடலுக்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்பதை மறுத்துள்ளார். ஒ சொல்றியா மாமா பாடலை ஆண்கள் அனைவருமே கொண்டாடுகின்றனர் என கூறியுள்ளார்.