1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 22 ஜனவரி 2021 (16:38 IST)

யோசிச்சு பேசனும்: சுசித்ராவுக்கு சுரேஷ் எச்சரிக்கையா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளன்று கமலஹாசன் ஹவுஸ் ஆப் கதர் என்ற தனது நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார் என்பதும் அதன் காரணமாக அன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவருக்கும் தனது நிறுவனத்தின் கதராடை வழங்கினார் என்பதும் தெரிந்ததே 
 
ஆனால் இதுகுறித்து சமீபத்தில் கருத்து கூறிய பாடகி சுசித்ரா கமல்ஹாசனின் கதர் நிறுவனம் தனக்கு கொடுத்தது கதர் ஆடையை இல்லை என்றும் சின்தடிக் ஆடை என்றும் கமல்ஹாசன் ஒரு ஏமாற்று பேர்வழி என்றும் அவர் கொடுத்த ஆடை தரமாக இல்லை என்றும் கூறியிருந்தார்
 
இதனை அடுத்து ஹவுஸ் ஆப் கதரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாங்கள் கொடுத்தது கதர் ஆடை தான் என்றும் ஆனால் சுசித்ரா தான் மாற்றி அணிந்து கொண்டார் என்றும் விளக்கமளித்தனர். இந்த நிலையில் இது குறித்து சுரேஷ் சக்ரவர்த்தி தனது டுவிட்டரில் கூறியபோது எந்த ஒரு விஷயத்தையும் பேசும்போது யோசித்து பேச வேண்டும் என்றும், குறிப்பாக ஒரு நிறுவனத்தை பற்றி பேசும்போது இவ்வாறு வார்த்தைகளை விடக்கூடாது என்று கூறியுள்ளார். சுரேஷின் இந்த பதிவு சுசித்ராவுக்கு எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது