திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (16:54 IST)

அண்ணனுடன் முதல் செல்பி இதுதான்… கார்த்தி பகிர்ந்த புகைப்படம்!

நடிகர் கார்த்தி தனது அண்ணன் சூர்யாவோடு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் சூர்யாவின் 44 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதையொட்டி அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் ஆர்வமாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவரின் தம்பியான கார்த்தி சூர்யாவோடு முதல் முதலாக எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தைப் பகிர்ந்து அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.