தூசு தட்டப்படும் ‘பிசாசு 2’ திரைப்படம்… எப்போது ரிலீஸ்?
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பிசாசு 2. 2014-ம் ஆண்டு வெளியான பிசாசு படத்துக்கும் இந்த படத்துக்கும் திரில்லர் என்பதைத் தவிர வேறு எந்த தொடர்பும் இல்லை என்று மிஷ்கின் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டே முடிவடைந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் படம் ரிலீஸாகவில்லை.
2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட படம் தயாரிப்பாளரின் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக ரிலீஸாகவில்லை. படம் ரிலீஸாவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இந்நிலையில் பிசாசு 2 படத்தை ரிலீஸ் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
பிசாசு 2 படத்தைத் தயாரித்த ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், பிளையிங் ஹார்ஸ் நிறுவனத்துக்காக தரவேண்டிய பணத்தை செலுத்தாதது சம்மந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இந்நிலையில் ராக்போர்ட் நிறுவனம் தரவேண்டிய 1.8 கோடி ரூபாயைத் தராமல் பிசாசு 2 படத்தை வெளியிடக் கூடாது என தடைவித்தித்துள்ளது நீதிமன்றம்.
இந்நிலையில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ரிலீஸாகாமல் முடங்கிக் கிடக்கும் பிசாசு 2 படத்தை தற்போது ரிலீஸ் செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மார்ச் மாதத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.