திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 23 ஜூலை 2021 (16:19 IST)

பிக்பாஸ் 5 சீசனுக்கு தேர்வான இரண்டு பிரபலங்கள்!

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார் கமல்ஹாசன். இந்நிகழ்ச்சிக்கு தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் அதிக ரசிகர்கள் உள்ளனர்.
 
கடந்த வருடம் போலவே 5 வது சீசனும் அக்டோபர் மாத இறுதியில் துவங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில்  இதில் செம்பருத்தி சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் மற்றும் சுனிதா இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எப்போதும் அமைதியாக இருக்கும் கார்த்திக் ராஜ் பிக்பாஸில் மாட்டிக்கொண்டு என்ன செய்வரோ என புலம்புகிறது சீரியல் வட்டாரம்.