1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 14 ஜூன் 2021 (17:31 IST)

சாலை விபத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் உயிரிழப்பு: ரசிகர்கள் சோகம்!

சாலை விபத்தில் தேசிய விருது பெற்ற நடிகர் உயிரிழப்பு: ரசிகர்கள் சோகம்!
தேசிய விருது பெற்ற கன்னட நடிகர் சஞ்சாரி விஜய் என்பவர் உயிரிழந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது 
 
கன்னடத் திரையுலகின் பிரபல நடிகராக இருந்து வருபவர் சஞ்சாரி விஜய். இவர் ’நானும் அவன் அல்ல அவளு’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார் என்பதும் அதுமட்டுமின்றி பிலிம்பேர் விருதுகளை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி நடிகர் சஞ்சாரி விஜய் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதியதாகவும் இதனால் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் அவர் காலமானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது சாலை விபத்தில் பிரபல நடிகர் சஞ்சாரி விஜய் காலமானதை அடுத்து அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்