செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 13 ஜூன் 2021 (19:54 IST)

39 மனைவிகள், 94 குழந்தைகள்: உலகின் மிகப்பெரிய குடும்பத்தலைவர் காலமானார்!

39 மனைவிகள், 94 குழந்தைகள்: உலகின் மிகப்பெரிய குடும்பத்தலைவர் காலமானார்!
39 மனைவிகள் மற்றும் 94 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த உலகின் மிகப்பெரிய குடும்பத்தலைவர் காலமானார். அவருக்கு வயது 76 
 
மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த சியோனா சனா என்பவர் என்பவருக்கு 39 மனைவிகள் 94 பிள்ளைகள் 33 பேரை குழந்தைகள் உள்ளனர். அவரது குடும்பத்தில் மொத்தம் 181 உறுப்பினர்கள் உள்ளனர். உலகின் மிகப்பெரிய குடும்பத்திற்கு சொந்தக்காரரான இவர் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி காலமானார் 
 
மிசோரம் மாநிலத்துக்கு சுற்றுலா செல்பவர்கள் இவருடைய வீட்டிற்கும் சென்று வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் மிசோரம் மாநிலத்தின் முக்கிய சுற்றுலா ஆதாரமாக இருந்த சியோனா சனா என்ற குடும்பத்தலைவர் அவர்கள் காலமானது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அம்மாநில முதல்வர் தனது சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் 
 
உலகின் மிகப்பெரிய குடும்பத் தலைவர் மறைந்தார் என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.