திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 21 ஜூன் 2022 (15:19 IST)

தியேட்டரில் சோபிக்காத கங்கனாவின் ஸ்பை திரில்லர் ‘தாகத்’… ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் சமீபத்தில் வெளியான தாகத் திரைப்படம் படுதோல்வியடைந்தது.

பாலிவுட்டில் முன்னணி நாயகியாக திகழ்ந்து வரும் கங்கனா ரனாவத் தமிழில் சமீபத்தில் வெளியான தலைவி படத்தின் மூலம் பிரபலமனார். இவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றவர். ஆனால் வாயைத் திறந்தாலே சர்ச்சைதான். பாஜக மற்றும் இந்துத்வா அமைப்புகளின் தீவிர ஆதரவாளரான இவர் காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்வது வாடிக்கை. அதுபோலவே பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் அனைவர் குறித்தும் கடுமையான விமர்சனங்களை அவ்வப்போது வைத்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் நடித்த தாக்கட் என்ற திரைப்படம் ரிலீஸானது. பல கோடி ரூபாய் முதலீட்டில் வெளியான இந்த திரைப்படம் இதுவரை இல்லாத அளவுக்கு படுமோசமான தோல்வியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் ரிலீஸாகி 8 ஆவது நாளில் வெறும் 20 டிக்கெட்கள் மற்றுமே விற்பனை ஆகியுள்ளதாகவும், அன்றைய வசூல் சுமார் 4420 ரூபாய்தான் என்றும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பின. சுமார் 90 கோடியில் உருவான திரைப்படம் திரையரங்குகள் மூலமாக 5 கோடி ரூபாய் கூட வசூல் செய்யவில்லை என்று சொல்லப்பட்டது.

அரசியல் கருத்துகளில் கங்கனா அனைவராலும் வெறுக்கப்பட்டாலும், அவரின் நடிப்புத்திறமைக்காக பரவலாக ரசிகர்களைப் பெற்றிருந்தார். ஆனால் அவரின் படம் ஒன்று இவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்திருப்பது பரபரப்பாக சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது ‘தாக்கட்’ திரைப்படம் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளது.