1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (10:28 IST)

நட்சத்திர விடுதி போதை பார்ட்டி - பாலிவுட் பிரபலத்தின் மகன் கைது!

பெங்களூருவில் நட்சத்திர விடுதியில் போதை விருந்தில் பங்கேற்ற இந்தி நடிகர் சக்தி கபூரின் மகன் சித்தாந்த் கைது செய்யப்பட்டார்.

 
நடிகர் சக்தி கபூரின் மகன் சித்தாந்த் கபூர் பெங்களூருவில் நடந்த ரேவ் பார்ட்டியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. போதைப்பொருள் உட்கொண்டதாக கூறப்படும் 6 பேரில் அவரும் ஒருவர் என்று பெங்களூரு காவல்துறை தெரிவித்துள்ளது.
 
போலீஸாரின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு எம்ஜி சாலையில் உள்ள ஒரு ஆடம்பரமான ஹோட்டலில் ரேவ் பார்ட்டி நடந்து கொண்டிருந்த போது, போலீஸ் குழு அந்த இடத்தை சோதனை செய்து அவர்களைக் கைது செய்தது. சித்தாந்த் கபூரைத் தவிர மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 
முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டில் கன்னடத் திரையுலகின் ஒரு பகுதியில் போதைப்பொருள் பயன்பாட்டை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்கள் நடிகர்கள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி மற்றும் முன்னாள் அமைச்சர் மறைந்த ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா ஆகியோரை கைது செய்தனர்.