1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 ஜூன் 2022 (16:56 IST)

செருப்போடு கோவிலுக்குள் போன ஹீரோ! – பிரம்மாஸ்திரா படத்திற்கு எதிர்ப்பு!

Brahmāstra
சமீபத்தில் இந்தியில் தயாரிக்கப்பட்டு பேன் இந்தியா படமாக வெளியாகவுள்ள பிரம்மாஸ்திரா பட ட்ரெய்லர் வெளியான நிலையில் சர்ச்சையை சந்தித்துள்ளது.

பாலிவுட் சினிமாவில் நம்பர் 1 நடிகையாக வலம் வருபவர் ஆலியாபட். இவரும் இவரது காதலர் ரன்பீர் கபீர் இணைந்து நடித்துள்ள படம் பிரம்மாஸ்த்ரா.  இப்படம் சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

இப்படத்தை இயக்குநர் அயர்ன் முகர்ஜி இயக்குயுள்ளார். இப்படத்தை தர்மா புரொடேக்சன் மற்றும் பாக்ஸ் ஸ்டார் இந்தியா தயாரிக்கிறது.

இப்படத்தில், சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ரன்பீர்  ஆலியாபட், நாகர்ஜுனா உள்ளிட்ட பிரபலங்கள்  நடித்துள்ளனர்.இப்படம் தமிழ் , தெலுங்கு,  இந்தி, கன்னட, மலையாள உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
 
Brahmastra

இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வைரலான நிலையில் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக எந்த பாலிவுட் படம் வெளியானாலும் அதில் வாரிசு நடிகர்கள் நடித்திருந்தால், சுஷாந்த் சிங் ஆதரவாளர்கள் அந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என ட்ரெண்டிங் செய்வது வாடிக்கையாக உள்ளது. இந்த படத்திற்கும் அவர்களது ட்ரெண்டிங் இருந்து வருகிறது.

கூடுதலாக இந்த படத்தின் ஒரு காட்சியில் ரன்பீர் கபூர் ஷூ அணிந்த கால்களோடு கோவிலுக்குள் சென்று மணி அடிப்பது போன்ற காட்சி உள்ளது. அதை சுட்டிக்காட்டி இந்து மத சம்பிரதாயங்களை மீறும் வகையில் காட்சிகள் உள்ளதாகவும் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.