செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (14:37 IST)

பிரபல இயக்குனர்களோடு Expandables போஸ் கொடுத்த கமல்.. வைரலாகும் புகைப்படம்!

நடிகர், அரசியல் வாதி என பலதுறைகளில் பயணித்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.

விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் அடுத்தடுத்து வரிசையாக படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். மகேஷ் நாராயணனோடு ஒரு படம், இந்தியன் 2, மீண்டும் லோகேஷோடு ஒரு படம் என அடுத்தடுத்து கமிட்மெண்ட்களில் உள்ளார்.

இந்நிலையில் இயக்குனர்கள் வெற்றிமாறன், பா ரஞ்சித் ஆகியோர் கமலுக்கு கதை சொல்லி சம்மதம் வாங்கி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது கமல்ஹாசன் இயக்குனர்கள் சந்தானபாரதி, பா ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் இயக்குனர் தரணி ஆகியோருடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.