ட்ரோல்களை எதிர்கொண்ட மைக்கேல் திரைப்படம்… இயக்குனரின் பொறுப்பான பதில்!
சந்தீப் கிஷான் ஹீரோவாக நடிப்பில் இயக்குனர் ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கத்தில், விஜய் சேதுபதி,கௌதம் மேனன் மற்றும் வரலட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்த மைக்கேல் படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது.
நல்ல எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் பொறுமையை சோதித்துள்ளது. பலரும் கேஜிஎப் போல எடுக்க நினைத்து சொதப்பி வைத்துள்ளதாக சமூகவலைதளங்களில் ஆதங்கத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் சமிபகாலத்தில் அதிக ட்ரோல்களை சந்தித்த படமாகவும் அமைந்தது.
இதுபற்றி இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “உங்கள் கருத்துகளுக்கு எனது அன்பு.. எனது எல்லாப் படைப்புகளையும் போலவே மைக்கேல் திரைப்படமும் என் இதயத்துக்கு நெருக்கமான ஒன்றுதான். அதற்கும் என் 100% உழைப்பையே கொடுத்திருக்கிறேன். அனைவரையும் திருப்திபடுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை. ஒவ்வொருவருக்கும் ரசனையும் விருப்பத்தேர்வும் மாறுபடவே செய்யும்.
மைக்கேல்-ஐ ரசித்தவர்களுக்கு நன்றி; மாறுபட்ட கருத்துக் கொண்ட ரசிகர்களுக்கு, அடுத்த முறை உழைக்கத் தயாராக இருக்கிறேன். உங்கள் அனைத்து கருத்துக்களையும் மதிக்கிறேன். உங்களையும் கவரும் ஒரு சினிமாவுக்காக.. ஆகப்பெரும் வாஞ்சையுடன்-ரஞ்ஜித் ஜெயக்கொடி” எனக் கூறியுள்ளார்.