ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 26 அக்டோபர் 2018 (19:17 IST)

'ஒட்டாரம் பண்ணாத' : ஓவியா-விமலின் கலக்கும் 'களவாணி 2'பாடல்

8 வருடங்களுக்கு முன் சற்குணம் இயக்கத்தில் விமல் - ஓவியா நடித்து  வெளியான களவாணி படம் பெரும் ஹிட்டடித்தது. 
 
தஞ்சாவூர் வட்டார பகுதி மக்களின் எதார்த்த வாழ்க்கையை காமெடி கலந்து சற்குணம் இயக்கி இருப்பார். கல்லூரி மாணவியாக ஓவியா நடித்திருப்பார். அவரை காதலிக்கும் வெட்டிப்பையனாக விமல் வாழ்ந்திருப்பார்.
 
படத்தில் பஞ்சாயத்து கேரக்டரில் கஞ்சா கருப்பு அசத்தியிருப்பார். இதில் சூரியும் தன் பங்குக்கு காமெடியில் மிரட்டியிருப்பார். இப்போது இவர்கள் பெரிய நடிகர்களாக இருக்கிறார்கள். ஆனால் 8 வருடத்துக்கு முன்பு புதுமுக நடிகர்களாகத்தான் இருந்தார்கள்.  இவர்கள் நடித்த இந்த களவாணி படத்துக்கு பெரிதாக எந்த விளம்பரமும்  செய்யப்படவில்லை. இருந்த போதிலும் களவாணி படம் சூப்பர் ஹிட் அடித்தது.  இந்நிலையில்
 
படத்தில் பெரிய டாப் நடிகர்களோ, நடிகையோ நடிக்கவில்லை. இதேபோல் பெரிய அளவில் எந்த விளம்பரமும் படத்துக்கு இல்லை.  இருந்த போதிலும்  வெற்றி பெற்று தமிழ் திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
 
இந்நிலையில் இந்த படத்துக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் விமலும்  ஓவியாவும் பிரபலமானார்கள். பின்னர் ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.
 
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதனையடுத்து தற்போது இந்த படத்திலிருந்து ஒட்டாரம் பண்ணாத என்ற பாடல் யூடியூப்பில் டிரெண்டாகி வருகிறது.
 
இதனையடுத்து ரசிகர்கள் #OviyaIsBack என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர்.