1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 அக்டோபர் 2018 (15:34 IST)

'சர்கார்' ரிலீஸ் தேதி நவம்பர் 2ஆ? நவம்பர் 6ஆ? குழப்பத்தில் ரசிகர்கள்

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'சர்கார்' படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டாலும், சரியான ரிலீஸ் தேதி குறித்து விஜய் ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
 
இந்த படத்தை தீபாவளிக்கு முன்பே அதாவது நவம்பர் 2ஆம் தேதி ரிலீஸ் செய்ய சன்பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. நவம்பர் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனால் வாரயிறுதி நாட்கள் அதன் பின்னர் தீபாவளி நாள் வசூல் என ஒரு பெரும் தொகையை வசூல் செய்துவிடலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.
 
ஆனால் அதே நேரத்தில் தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்பவர்கள் நவம்பர் 2ஆம் தேதிதான் கிளம்புவார்கள். மேலும் தீபாவளி பர்சேஸ் என பிசியாக இருக்கும் நாளில் சர்கார்' வெளியானால் ஓப்பனிங் வசூல் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அண்ணா பல்கலைக்கழக தேர்வும் அந்த தேதியில் உள்ளது. எனவே பெரும்பாலானோர்களின் கருத்து நவம்பர் 6ல் ரிலீஸ் செய்வதே நல்லது என்று கூறப்படுகிறது.
 
இன்று அல்லது நாளை சர்கார் திரைப்படம் சென்சாருக்கு செல்லவுள்ளதாகவும் அதன்பின்னரே ரிலீஸ் தேதி அதிகார்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது