க பெ ரணசிங்கம் படத்தின் வசனகர்த்தாவுக்கு கார் வழங்கிய தயாரிப்பாளர்!
க பெ ரணசிங்கம் படத்தின் வசனகர்த்தா சண்முகத்துக்கு படத்தின் தயாரிப்பாளர் கே ஜே ஆர் ராஜேஷ் மற்றும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் கார் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளனர்.
சமீபத்தில் ஓடிடியில் வெளியான க பெ ரணசிங்கம் திரைப்படம் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் வெளிநாட்டில் விபத்து ஒன்றில் இறந்து போன தனது கணவனின் உடலை போராடி இந்தியா கொண்டுவரும் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இதில் ஆங்காங்கே அரசியல் கருத்துகளை தெளித்திருந்தார் இயக்குனர் விருமாண்டி.
இந்நிலையில் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு கவனம் விழுந்து பரவலாக பார்க்கப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் படத்தின் இயக்குனர் பெ விருமாண்டிக்கு கார் ஒன்றை பரிசாக சில வாரங்களுக்கு முன்னர் அளித்தார் ராஜேஷ். அதையடுத்து இப்போது படத்தின் வசனத்தை எழுதிய சண்முக முத்துசாமிக்கு பரிசாக ஒரு காரை கொடுத்துள்ளார். இதை அவரும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷும் சேர்ந்து அளித்துள்ளனர்.
இதுகுறித்து அவர் டிவிட்டரில் க/பெ ரணசிங்கம்' உழைப்பின் வெற்றிக்குப் பாராட்டுப் பத்திரமாகப் பரிசளித்த முதலாளி கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் சார், தலைவி ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்கும் நன்றி நன்றி. வெற்றிக்குத் தோள்கொடுத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சார், மாப்பிள்ளை விருமாண்டி மற்றும் குழுவின் ஒவ்வொருவருக்கும் நன்றி". எனத் தெரிவித்துள்ளார்.