செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 21 டிசம்பர் 2020 (18:52 IST)

தமிழகத்தில் இன்று 1,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! 14 பேர் பலி

தமிழகத்தில் இன்று மேலும்  1,127   பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை 8,05,777 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை1202 ஆகும். இதுவரை மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,84,117  ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோவால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 11,968  பேராக அதிகரித்துள்ளது.

இன்று 76,348   பேர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். இதுவரை மொத்தம்  1,33, 87, 049  பேர் பரிசோதனை  செய்துள்ளனர்.

சென்னையில் இன்று 333பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை பாதித்தோர் எண்ணிக்கை மொத்தம் 221937 ஆக அதிகரித்துள்ளது.#coronoupdate