ஜூனியர் என்.டி.ஆர்க்கு ஆஸ்கர் விருதா? – ஹாலிவுட் பத்திரிக்கை கணிப்பு!
ஆஸ்கர் விருதுகளுக்கான நாமினேஷன்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சிறந்த நடிகர்கள் பட்டியலில் ஜூனியர் என்.டி.ஆர் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஆஸ்கர் விருந்து எனப்படும் அகாடமி விருதுகளுக்கான திரைப்பட தேர்வு நடந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான 95வது அகாடமி விருதுகளுக்கான திரைப்படங்களில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் பல்வேறு பிரிவுகளில் தீவிரமாக போட்டியிட்டு வருகிறது.
ஆஸ்கர் விருதுகளுக்கான முதல் 5 பிரிவுகளுக்கான பரிந்துரை பட்டியல் வெளியான நிலையில் அதில் சிறந்த பாடலுக்கான பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் “நாட்டு கூத்து” பாடல் தேர்வாகியுள்ளது. அடுத்து சிறந்த நடிகர், நடிகைக்கான பரிந்துரை பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பரிந்துரையில் இடம்பெறும் டாப் 10 நடிகர்கள் யாராக இருப்பார்கள் என ஹாலிவுட் பத்திரிக்கையான வெரைட்டி ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தி சன் படத்திற்காக ஹூக் ஜாக்மன், எமான்சிபேஷன் படத்திற்காக வில் ஸ்மித், ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக என்.டி.ராமாராவ் ஜூனியர் உள்ளிட்டவர்கள் பரிந்துரைக்கப்படலாம் என தனது கணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
இதனால் ஆஸ்கர் விருது பெரும் முதல் இந்திய நடிகராக ஜூனியர் என்.டி.ஆர் இருப்பார் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் ட்விட்டரில் இதை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Edit By Prasanth.K