வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2022 (08:27 IST)

எவ்ளோ போராடியும் நாமினேட் ஆகாத ஆர்.ஆர்.ஆர்! – ஆஸ்கர் நாமினேஷன் படங்கள்!

ஆஸ்கர் விருது விழாவில் ஸ்பெஷல் கேட்டகரியில் போட்டியிட்டு வந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பரிந்துரை பட்டியலில் இடம்பெறவில்லை.

உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஆஸ்கர் விருந்து எனப்படும் அகாடமி விருதுகளுக்கான திரைப்பட தேர்வு நடந்து வருகிறது. இந்த ஆண்டிற்கான 95வது அகாடமி விருதுகளுக்கான திரைப்படங்களில் இந்திய அரசால் ’லாஸ்ட் ப்லிம் ஷோ’ என்ற படம் அனுப்பப்பட்டது.

ஆஸ்கர் விருதை வாங்க முனைப்போடு களம் இறங்கிய ராஜமௌலி தனது வசூல் சூப்பர்ஹிட்டான ஆர்.ஆர்.ஆர் படத்தை பல்வேறு கேட்டகரியிலும் ஸ்பெஷல் மென்சனில் கொண்டு சென்று திரையிட்டார். பல ஹாலிவுட் விமர்சகர்களும் கூட அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஆர்.ஆர்.ஆர் உள்ளதாக தங்கள் கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது ஆஸ்கர் விருதுக்கான முதல் 10 கேட்டகரிக்கான படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. சிறந்த டாகுமெண்டரி, குறும்படம், அனிமேஷன் குறும்படம், சிறந்த உலக திரைப்படம் ஆகியவற்றிற்கான பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் சிறந்த உலக திரைப்படத்திற்கான பட்டியலில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட லாஸ்ட் ப்லிம் ஷோ படம் இடம்பெற்றுள்ளது. இந்த கேட்டகரியில் ஆர்.ஆர்.ஆர் போட்டியிட்டும் அது பரிந்துரைக்கு தகுதி பெறவில்லை. ஆனால் சிறந்த பாடலுக்கான பிரிவில் ‘நாட்டு கூத்து’ பாடல் இடம்பெற்றுள்ளது.

Edit By Prasanth.K