வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 டிசம்பர் 2022 (09:50 IST)

கோல்டன் க்ளோப் விருதிலும் ‘ஆர்.ஆர்.ஆர்’! அப்போ ஆஸ்கர் கன்பார்ம்!?

ஆஸ்கர் ரேஸில் தீவிரமாக போட்டி போட்டு வரும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தற்போது கோல்டன் க்ளோப் விருதுகளுக்கும் நாமினேட் செய்யப்பட்டுள்ளது.

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து வெளியான படம் ஆர்.ஆர்.ஆர். உலகம் முழுவதும் பெரும் ஹிட் அடித்த இந்த படம் மொத்தமாக 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து பெரும் வசூல் சாதனையையும் படைத்தது.

இந்த படத்தை ஆஸ்கர் விருது விழாவின் அனைத்து பிரிவுகளிலும் கொண்டு சென்றுள்ள இயக்குனர் ராஜமௌலி ஆஸ்கர் விருது வாங்குவதில் தீவிரமாக உள்ளார். மேலும் ஆர்.ஆர்.ஆர் படத்தை பார்த்த வெளிநாட்டு திரை பிரபலங்கள் பலரும் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஜனவரியில் நடைபெற உள்ள கோல்டன் க்ளோப் விருதுகள் விழாவிலும் ஆர்.ஆர்.ஆர் படம் இரண்டு பிரிவுகளில் தேர்வாகியுள்ளது. ஆங்கிலம் அல்லாத சிறந்த திரைப்படம் என்ற பிரிவிலும், ’நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான பிரிவிலும் நாமினேட் ஆகியுள்ளது. பெரும்பாலும் கோல்டன் க்ளோப் விருதுகளில் விருது பெரும் படங்கள் ஆஸ்கரிலும் விருது வெல்வதால் ஆர்.ஆர்.ஆர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Edited By Prasanth.K