ஜிகர்தண்டா 2 தொடங்குவது எப்போது?... வெளியான தகவல்!
கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய மெஹா ஹிட் படமான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனம் ஆகியோர் நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் நல்ல விமர்சனத்தையும் பெற்றது. இந்த படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்திய பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது.
இதையடுத்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. ஆனால் முந்தைய படத்துக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.
இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் நடிக்க உள்ளனர். இதையடுத்து படத்தின் தொடக்க நிகழ்வு நாளை மறுநாள் (டிசம்பர் 11) சென்னையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜே தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.