பாலிவுட்டின் அதிக வசூல் செய்த படங்களில் ஜவான் இரண்டாமிடம்!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. இந்த படத்தில் தமிழ் பிரபலங்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
ஷாருக் கானின் சமீபத்தைய படமான பதான் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் ஜவான் படத்தின் வசூல் பதான் வசூல் சாதனையை முறியடித்து வருகிறது. இன்று ரிலீஸாகி 19 ஆவது நாளில் ஜவான் திரைப்படம் 1000 கோடி ரூபாய் வசூலை தொட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 26 ஆவது நாளில் 1100 கோடி ரூபாய் என்ற பென்ச் மார்க்கை தொட்டுள்ளது. இதன் மூலம் பாலிவுட்டில் அதிக வசூல் செய்த இரண்டாவது படம் என்ற சாதனையை ஜவான் படைத்துள்ளது. முதலிடத்தில் அமீர்கானின் தங்கல் திரைப்படம் உள்ளது.