சூர்யா நடிக்கவுள்ள பாலிவுட் படத்தில் இணையும் தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்!
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சமீபகாலமாக மும்பையில் அதிகமாக தங்கியிருக்கும் சூர்யா, விரைவில் நேரடி பாலிவுட் படமொன்றில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்கள் சிலரை சந்தித்து அவரின் மனைவி ஜோதிகா கதைகேட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து சூர்யாவின் முதல் பாலிவுட் படத்தை ராகேஷ் ஓம்ப்ரகாஷ் மெஹ்ரா இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் ஒரு புராண கால படம் என சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவி வர்மன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.