1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 31 டிசம்பர் 2022 (17:02 IST)

''விஜய்67’' படத்தில் நடிகர் சூர்யா?

suriya
நடிகர் விஜய் நடிக்கவுள்ள விஜய்67 படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர்  வம்சி இயக்கத்தில்  நடித்துள்ள வாரிசு படம் வரும் பொங்கலுக்கு துணிவு படத்துடன் மோதவுள்ளது.

இப்படத்தை அடுத்து, விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய்67 படத்தில் நடிக்கவுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ்-ல் போதைப் பொருட்களுக்கு எதிரான கான்செப்ட் என்பதால், கடைசியாக இவர் இயக்கிய விக்ரம் படம் சூப்பர் ஹிட் ஆனது.

அதில், ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். அதேபோல், விஜய் 67 படத்திலும் அவர்  நடிப்பாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த  நிலையில், சூர்யா தளபதி67  படத்தின் டிவீட்டிற்கு லைக் பதிவிட்டிருந்தார். பின்னர் அதை எடுத்துவிட்டார்.

இதனால், சூர்யா,விஜய்67 படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.