1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2022 (15:53 IST)

முக்கியக் காட்சிகளை படமாக்க தயாராகும் சூர்யா 42 படக்குழு!

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப் படவில்லை.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வரும் நிலையில் இந்த படம் நிகழ்காலம் மற்றும் பல ஆயிரங்களுக்கு முந்தைய காலம் என இரு தளங்களில் நடப்பதாக உருவாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது நிகழ்கால காட்சிகளை படமாக்கி முடித்துள்ள படக்குழு, பொங்கலுக்கு பிறகு வரலாற்றுக் காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.