கேஜிஎஃப் படத்துக்கும் சலார் படத்துக்கும் இப்படி ஒரு ஒற்றுமை இருக்கா?
பிரசாந்த் நீல் இப்போது பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கி வருகிறார்.
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பிருத்திவிராஜ், ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட ஏராளாமானோர் நடித்து வருகின்றனர்.
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தை படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதத்தோடு மொத்தமாக முடிய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரஹந்தர் கூறியுள்ளார்.
இந்நிலையில் கேஜிஎப் படத்தை போலவே சலார் படமும் இரண்டு பாகங்களாக ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இரண்டு பாகங்களின் ஷுட்டிங்கும் மொத்தமாக முடிந்த பின்னரே முதல்பாகம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது