ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2022 (09:36 IST)

எங்கள் படங்களின் வசூலை சலார் முறியடிக்கும்… கேஜிஎப் தயாரிப்பாளர் நம்பிக்கை!

கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் சலார் படத்தில் பிரபாஸ் நடித்து வருகிறார்.

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பிருத்திவிராஜ், ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட ஏராளாமானோர் நடித்து வருகின்றனர்.

2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தை படத்தின் ஷூட்டிங் ஜனவரி மாதத்தோடு மொத்தமாக முடிய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரஹந்தர் கூறியுள்ளார்.

மேலும் அவர் “இந்த படத்தின் வி எஃப் எக்ஸ் வேலைகள் மட்டும் 6 மாதம் நடக்க உள்ளன. எங்கள் நான்கு படங்களின் வசூல் சாதனையை சலார் முறியடிக்கும்” எனக் கூறியுள்ளார்.