வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2022 (14:28 IST)

எனக்கே தெரியாமல் முடிவு செய்யப்பட்ட திருமணம் தேதி.. நடிகை கிருத்தி சனோன் பதிவு!

Krity sanon
நடிகை கிருத்தி சனோன் பிரபல நடிகர் பிரபாசை காதலித்து வருவதாகவும் விரைவில் அவர் திருமணம் செய்யப்போவதாகவும் கூறப்பட்ட நிலையில் எனக்கே தெரியாமல் பலர் என்னுடைய திருமணத்தை நிச்சயித்து வந்துள்ளனர் என்றும் இந்த தகவல் அனைத்தும் வதந்தி என்றும் விளக்கமளித்துள்ளார். 
 
பாகுபலி திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான பிரபாஸ் பிரபல பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் என்பவரை காதலித்து வருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
இருவரும் இணைந்து ஆதிபுருஷ் என்ற படத்தில் நடித்து வருவதால் படப்பிடிப்பின்போது காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கிருத்தி சனோன் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் 
 
நான் பிரபாசை காதலிப்பதாக சில இணையதளங்களில் வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும் எனக்கே தெரியாமல் திருமண தேதியை முடிவு செய்திருக்கிறார்கள் என்று முழுக்க முழுக்க வதந்தி தான் இது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
இதனை அடுத்து பிரபாஸ் கிருத்தி சனோன் காதல் என்பது முழுக்க முழுக்க வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
 
Edited by Mahendran