திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 27 நவம்பர் 2022 (09:49 IST)

பொன்னியின் செல்வன் நடிகையை காதலிக்கிறாரா நாக சைதன்யா?

நாக சைதன்யா சமீபத்தில் நடிகை சமந்தாவை சமீபத்தில் விவாகரத்து செய்தார். இதன் மூலம் இருவரும் பரபரப்பாக பேசப்பட்டனர்.

நடிகை சமந்தா கடந்த நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததை அடுத்து  அந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரிலீஸானது. அடுத்து குஷி, யசோதா மற்றும் சகுந்தலம் ஆகிய படங்கள் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. அதே போல நாக சைதன்யாவும் அடுத்தடுத்து தனது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நாக சைதன்யா இப்போது தனது சக நடிகையான சோபிதாவைக் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவரும் சமீபத்தில் வெளிநாட்டுக்கு ஒன்றாக சுற்றுலா சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோபிதா சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.