வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2022 (08:58 IST)

நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதி! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சமீப காலமாக உடல்நல குறைவாக உள்ள நடிகை சமந்தா ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. சில ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட அவர் சமீபத்தில் அவரை பிரிந்தார்.

பின்னர் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த சமந்தா சமீபத்தில் யசோதா படத்திற்கு டப்பிங் பேச ட்ரிப்ஸ் ஏற்றிய நிலையில் வந்த புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதுதான் அவருக்கு மையோசிடிஸ் என்ற நோய் பாதிப்பு இருப்பதை அவர் வெளியிட்டார்.

இந்நிலையில் தற்போது அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் மையோசிடிஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தெரியவில்லை. இந்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K