திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 26 நவம்பர் 2022 (17:14 IST)

நடக்க முடியாத நிலையில் சமந்தா? வெளியாகும் தகவல்

முன்னணி நடிகை சமந்தாவால்   உடல் நலக்குறைவால் நடக்க முடியாத நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. சில ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட அவர் சமீபத்தில் அவரை பிரிந்தார்.

பின்னர் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்த சமந்தா சமீபத்தில் யசோதா படத்திற்கு டப்பிங் பேச ட்ரிப்ஸ் ஏற்றிய நிலையில் வந்த புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதுதான் அவருக்கு மையோசிடிஸ் என்ற நோய் பாதிப்பு இருப்பதை அவர் வெளியிட்டார்.

இதுகுறித்து, அவரே ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறினார்,. இதற்கு, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில்,  இரண்டு நாட்களுக்கு முன் அவருக்கு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், தற்போது, அவர் வீட்டில் சிகிசை பெற்று வருவதாகவும், அவரால்  எழுந்து நடக்கக முடியாத நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகிறது.

வெளியாகியுள்ளது. அவர் மையோசிடிஸ் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து தெரியவில்லை. இந்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By Sinoj