1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : சனி, 26 நவம்பர் 2022 (14:34 IST)

சமந்தா உடல்நிலை பற்றி இணையத்தில் பரவும் தகவல்!

Samantha
நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோய் காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் சமீபத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் என்பதும் அதன்பிறகு டிஸ்சார்ஜ் ஆனார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் நேற்று இரவு அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் சமந்தாவின் உடல்நிலை சற்று மோசமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து கசிந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் சமந்தாவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக எந்தவித தகவலையும் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமந்தா விரைவில் குணமாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்
 
Edited by Mahendran