ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 20 பிப்ரவரி 2019 (13:30 IST)

இவர் தான் பிக் பாஸ் குரலுக்கு சொந்தக்காரரா? இது தெரியாம போச்சே இத்தனை நாளா?

கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டிதொட்டி எங்கும்  பிரபலமடைந்தது . 


 
இந்த நிகைழ்ச்சியில் பங்குபெற்ற அத்தனை பிரபலங்களும் பிக் பாஸ் என்ற ஒரு குரலுக்கு கட்டுப்பட்டனர்.  கர கரவென  கம்பீரமான அந்த குரலுக்கு சொந்தக்காரர் டப்பிங் ஆர்டிஸ்டான கோபி நாயர் தான் என செய்திகள் வந்தது. ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் பிக் பாஸ் குரலுக்கு உண்மையான சொந்தக்காரர் யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. பிரபல நடிகரும், தொகுப்பாளருமான ரிஷி தானாம் அது.  பிக் பாஸில் பங்கேற்ற அத்தனை பிரபலங்களையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்துள்ளார். 
 
இவர் சன் தொலைக்காட்சியில் "டீலா நோ டீலா", "கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி" , போன்ற கேம் ஷோக்களை தொகுத்து வழங்கி புகழ்பெற்றார். ரிஷி தொகுத்து வழங்கிய  “டீலா நோ டீலா” நிகழ்ச்சியை  எண்டோமால் நிறுவனம்  தயாரித்து வெற்றி கண்டது.   ஆதலால் பிக் பாஸ் நிகழ்ச்சியை தயாரித்த அந்நிறுவனம் ரிஷியை  பிக் பாசின் குரலுக்கு சொந்தக்காரராக மாற்றியது.


 
பிக் பாஸின் அந்த கம்பீர குரளுக்காக ரிஷியின் குரலை தொழில்நுட்பம் கொண்டு சில மாறுதல்களை செய்தனர் என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.