திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 18 பிப்ரவரி 2019 (13:18 IST)

பிக் பாஸ் யாஷிகா தூக்கிட்டு தற்கொலை? அடேய் யார் பார்த்த வேல டா இது.!

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். 


 
இந்நிலையில் பிக் பாஸ் யாஷிகா தற்கொலை செய்துகொண்டதாக இணையத்தில் செய்தி வெளியாக அதனை கண்ட யாஷிகா பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். 
 
அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாஷிகா என்ற நடிகை ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். ‘மன்னர் வகையறா’ படத்தில் துணை நடிகையாக நடித்த இவர், காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சண்டையிட்டு மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 
 
இந்நிலையில் சீரியல் நடிகை யாஷிகாவிற்கு பதிலாக பிக் பாஸ் யாஷிகா தற்கொலை செய்துகொண்டதாக பெங்காலி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 
இந்த தகவலை ரசிகர் ஒருவர் யாஷிகாவிற்கு டேக் செய்ய அதனை கண்டு பேரதிர்ச்சி அடைந்துள்ளார் யாஷிகா. மேலும் இந்த விஷயத்தை சீரியசாகிய யாஷிகாவின்  ரசிகர்கள்   செய்தி வெளியிட்ட ரசிகர்கள் மீது புகார் அளிக்குமாறு கூறி வருகின்றனர்.