திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (19:20 IST)

அருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் வெளியாகும் தேதி அறிவிப்பு

அருள்நிதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ திரைப்படம் வரும் மே 11-ம் தேதி வெளியாகிறது.

 
 
அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக மகிமா நடித்துள்ளார். ஆனந்த் ராஜ், அஜ்மல், சுஜா வருநீ, சாயா சிங், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டில்லி பாபு தயாரித்துள்ளார்.
 
ஓரே நாளில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி க்ரைம் த்ரில்லர் ஜானரில் இப்படம் உருவாகி இருக்கிறது. விக்ரம் வேதா புகழ் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
 
இந்த படம் வரும் மே 11-ம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.