உதயநிதி ஸ்டாலினை முந்தும் அருள்நிதி?


Cauveri Manickam (Murugan)| Last Modified புதன், 16 ஆகஸ்ட் 2017 (11:52 IST)
போகிற போக்கைப் பார்த்தால், உதயநிதி ஸ்டாலினுக்கு முன்பு அரசியலில் இறங்கி விடுவார் போல அருள்நிதி. 

 

 
அரசியல் வாரிசுகளுக்குள் போட்டியும், பொறாமையும் இருப்பது சகஜம்தான். கலைஞரின் பேரன்களான உதயநிதி ஸ்டாலினுக்கும், அருள்நிதிக்கும் போட்டி இருப்பதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. ஆனால், எதுவாக இருந்தாலும் அருள்நிதி துணிந்து அடிக்க, கொஞ்சம் பொறுமையாகத்தான் களமிறங்குகிறார் உதயநிதி.
 
2009ஆம் ஆண்டு வெளியான ‘ஆதவன்’ படத்தில், வேலைக்காரனாக சிறிய ரோலில் நடித்து ஆழம் பார்த்தார் உதயநிதி. ஆனால், அடுத்த வருடமே ‘வம்சம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் அருள்நிதி. 2012ஆம் ஆண்டு தான் உதயநிதியால் ஹீரோவாக முடிந்தது.
 
‘சரவணன் இருக்க பயமேன்’, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ என பயந்து பயந்து கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் கதைகளில் நடிக்கிறார் உதயநிதி. ஆனால், கரு.பழனியப்பன் இயக்கத்தில் முழுநீள அரசியல் படத்தில் நடிக்கப் போகிறார் அருள்நிதி. அது அரசியல் படம்தான் என்பதை வெளிப்படையாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அருள்நிதி. இப்படியே போனால், உதயநிதி வார்டு கவுன்சிலராக ஆகும்போது மாவட்டச் செயலாளராகி இருப்பார் அருள்நிதி என பேசிக்கொள்கிறார்கள். 


இதில் மேலும் படிக்கவும் :