செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (17:40 IST)

கமலின் வசதிக்கு ஏற்ப இந்தியன்-2 பட அரங்குகள்! ரசிகர்கள் மகிழ்ச்சி

கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் இந்த ஆண்டு ஜூன் மூன்றாம் தேதி வெளியான நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஜூன் மூன்றாம் தேதி வெளியிட சென்டிமென்டாக படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் இந்தியன்-2 படத்திற்குப் பிரமாண்ட அரங்குகள் அமைக்கும் பணியை படக்குழு ஆரமித்துள்ளது.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் அடுத்த மாதம் இதற்காக ஷூடிங்கில் கலந்துகொள்வதால், ஐதராபாத், மும்பையில் இந்தியன் 2 படத்திற்கு சென்றால், கமல்ஹாசனுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், படக்குழு சென்னையில் இப்படத்தின் வேலைகளை தொடங்கியுள்ளது.

பலமுறை தொடங்கி இடையில் நின்ற இப்படத்தை உதய நிதி தயாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளதால் முழு வீச்சில் இப்படம் தயாராகி விரைவில் திரைக்கு வரும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன்ர்.