செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 27 நவம்பர் 2021 (18:29 IST)

மருத்துவமனையில் கமல்... பிக்பாஸை தொகுத்து வழங்கும் பெண் பிரபலம் - ப்ரோமோ!

நடிகர் கமல் ஹாசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். எந்த மாற்றமும் இன்றி முதல் 5 சீசனும் அவரே தொகுத்து வழங்கி வந்தார். இதனிடையே அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை அவரது மகள் ஸ்ருதி ஹாசன் தொகுத்து வழங்குவார் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால், வ்ராத்தில் இறுதி நாளான இன்று கமல் தொகுத்து வழங்கவேண்டிய எபிசோடை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். 
 
அவர் என்ட்ரி கொடுக்கும் அந்த ப்ரோமோ விடியோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. அவருக்கு ஆடியன்ஸின் ரெஸ்பான்ஸ் வேற லெவலில் உள்ளது. இனி பிக்பாஸ் வீட்டில் நீலாம்பரியை காணலாம் கமலை மிஞ்சுவரா ரம்யா கிருஷ்ணன் என்பதை பார்க்க இன்று பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.