1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (15:31 IST)

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தை பாராட்டிய கமல் ஹாசன்

தமிழ் இலக்கியத்தில் முக்கிய எழுத்தாளர் ஜெயமோகன். இவர் ரப்பர், விஷ்ணுபுரம், அறம், வெண்முரசு உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். நடிகர் கமலின் பாப  நாசம், விஜய்யின் சர்க்கார், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

இவர்  கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் விஷ்ணு புரம் இலக்கிய வட்டத்தால் தமிழ் இலக்கிய செயல்ப்பாட்டாளர்களுக்கு ஆண்டு தோறும் இலக்கிய விருது வழங்கி வருகிறார்.

அந்த வகையில், இந்த ஆண்டிற்காக விஷ்ணுபுரம் சார்பில் விக்கி தூரன் விருது பெற மானுடவியல் - நாட்டாரியல் ஆய்வாளரான கரசூர் பத்மபாரதி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன் ஃபேஸ்புக்  பக்கத்தில்,விக்கி தூரன் விருது பெறும் மானுடவியல் - நாட்டாரியல் ஆய்வாளரான கரசூர் பத்மபாரதியை மனதார வாழ்த்துகிறேன். விரிவான கள ஆய்வுகளுடன் அவர் எழுதிய நரிக்குறவர் இனவரைவியல், திருநங்கையர் சமூக வரைவியல் ஆகியவை மிக முக்கியமான ஆக்கங்கள்.

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரை உரிய வகையில் கெளரவிக்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைப் பாராட்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.