1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 7 ஜூன் 2022 (23:57 IST)

''இந்தியன்-2 ''பட அப்டேட் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்

udhayanithi
சிவகார்த்திகேயன் நடிப்பில்,. சிபி சக்கரவர்த்தி இயக்கிய படம் டான். இப்படம் கடந்த 12 ஆம் தேதி வெளியானது.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் நடந்தது. இதில், கலந்துகொண்ட உதய நிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ டான் படம் வெற்றியடைந்ததற்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.

மேலும், கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இடையில் நின்றுபோன இந்தியன்-2 படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், இந்தியன் 2 படம் வேலைகள் ஆரம்பமாகும் என உறுதிபடத் தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.