இளையராஜா கலந்துகொள்ளும் முதல் சின்னத்திரை இசை நிகழ்ச்சி!
இசைஞானி இளையராஜா சன் தொலைக்காட்சியில் நடக்க உள்ள ரியாலிட்டி ஷோவில் கலந்துகொள்ள உள்ளார்.
இசைஞானி இளையராஜா இப்போதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர். இதுவரை இந்திய சினிமாக்களில் 7000 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ள அவர் இன்னமும் பிஸியான இசையமைப்பாளராக வெற்றிமாறன் மற்றும் பா ரஞ்சித் ஆகிய இளம் இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் இதுவரை எந்தவொரு சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாத அவர் முதல்முறையாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள ராஜபார்வை என்ற இசை ரியாலிட்டி ஷோவில் கலந்துகொள்ள உள்ளாராம். இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.