செவ்வாய், 6 ஜூன் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated: புதன், 11 ஜனவரி 2023 (15:24 IST)

''கோல்டன் குளோப் விருது'' வென்ற ஆர்.ஆர்.ஆர் படக்குழுவுக்கு வாழ்த்துக் கூறிய இளையராஜா

goldern globe
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்து   கடந்த ஆண்டு வெளியான படம் ஆர்.ஆர்.ஆர்.
 

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும்  உலகம் முழுவதும் பெரும் ஹிட் அடித்த இந்த படத்தை ஆஸ்கர் விருது விழாவின் அனைத்து பிரிவுகளிலும் இப்படம் கலந்து கொண்டனது.

இப்படம் ஆஸ்கருக்கு தேர்வாகாத நிலையில், ஒரிஜினியல் பாடல் பிரிவில் இப்படத்தில் கீரவாணி இசையில் இடம்பெற்ற நாட்டுக்குத்து பாடல் தகுதிபெற்றுள்ளது.

இந்த நிலையில், கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா தற்போது நடந்து வரும் நிலையில், ஆர்.ஆர்.ஆர். படத்தின் இடம்பெற்ற  நாட்டுக் குத்து பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் விருது வென்றுள்ளது.

இந்த விருதை இசையமைப்பாளர் கீரவாணி மேடையில் ஏறி பெற்றுக்கொண்டார்.  ஒட்டுமொத்த படக்குழுவினரும் இந்த  விழாவிற்கு  நேரில் சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இசை ஞானி இளையராஜா,  ''கடுமையான உழைப்பு வெற்றிக்குத் தகுதி ''என்று டுவீட் பதிவிட்டு, ஆர்.ஆர்.ஆர் படக்குழுவிற்கும் இசையமைப்பாளர் கீரவாணிக்கும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.