வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 11 மார்ச் 2022 (00:20 IST)

ஆர் ஆர் ஆர் படத்தின் 2வது சிங்கில் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்

சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி ரிலீசாக இருந்த நிலையில் திடீரென கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்த நிலையில் மீண்டும் இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இ ந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்தின்  2 வது சிங்கில் வரும் மார்ச் 25 ஆம் தேதி ரிலீஸாகும் என  நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இ ன்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் ஜூனியர் என்.டி.ஆர்- ராம்சரண் இருவருடம் ஆலியாபட் இருக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.