செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 23 மார்ச் 2022 (21:59 IST)

ஆர். ஆர்.ஆர் படத்திற்கு எதிர்ப்பு....ரசிகர்கள் எச்சரிக்கை

ஆர். ஆர். ஆர் படம் மார்ச் 25 ஆம் தேதி பேன் இந்தியா படமாக பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டியையொட்டி  ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருந்தது.  இதற்காக படக்குழுவினர் இந்தியா முழுவதும் ப்ரமோஷன் செய்து வந்தனர். ப்ரமோஷன் பணிகளுக்காகவே கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் பேன் இந்தியா திரைப்படமாக ஆர் ஆர் ஆர் ரிலீஸானாலும், அண்டை மாநிலங்களில் அதிகமாக தெலுங்கு வெர்ஷனையே படக்குழு ரிலிஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தங்கள் மொழியில் படம் பார்க்கலாம் எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைய வாய்ப்புள்ளது.

இந்நிலையில், கர்நாடக  மாநில ரசிகர்கள், ஆர்.ஆர்.ஆர் #RRRMovie  என்ற பிரமாண்ட படத்திற்கு எதிர்ப்பு      தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின்  கர்நாடக வெர்சன் வெளியாகவில்லை என்றால் இப்படத்தைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என எச்சரித்துள்ளனர். மேலும்   கர்நாடக மக்களுக்கு ஆர்.ஆர்.ஆர் படம் கர்நாடகத்தில் வேண்டும்;  நாங்கள்  இயக்குநர்   ராஜமெளலிக்கோ,  மற்ற  நடிகருக்கோ நாங்கள் எதிராக இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.