புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 26 ஜூன் 2019 (17:38 IST)

அறிமுக இயக்குநருக்கு இளையராஜா அட்வைஸ் !

இயக்குநர் கௌதமனின்  மகன் நடிகராக அறிமுகமாகும் படம் முன்பதிவு. இப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. கூத்துப்பட்டறை கலைஞர்களும் இவர்களுடன் இணைய உள்ளனர். ஆலயா கிரியேசன்ஸ் நிறுவனத்தின் சார்பில்  அன்பசரன் இப்படத்தை தயாரிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜி.எம்,துரைப்பாண்டியன் கூறியுள்ளதாவது :
டீன் ஏஜ் பருவத்தில் ஆணுக்கும்- பெண்ணுக்கும் இடையே உருவாகும் இனக்கவர்ச்சியை காதல் என்று புரிவதால், எதிர்காலத்தில் அவர்களது உறவினர்கள், நண்பர்களுக்கு  இடையேயான உறவுகளை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள். என்பதுதான் முன்பதிவு திரைப்படத்தின் கதை. 
 
இந்தப் படத்திற்கு இசையமைக்க இளையராஜாவிடம் சென்றேன் அவருக்கு கதை பிடித்துவிட்டது. ஆனால் கதை சொன்னதை அப்படியே படமாக எடுக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். இளையராஜா படத்திற்கு இசை அமைப்பதால் படத்தில் நடிக்கும்  அனைவருக்கும் ஒரு நம்பிக்கை உருவாகிவிட்டது என்று அவர் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.