சூர்யாவின் அடுத்த பட அறிவிப்பை வெளியிடும் ராஜமௌலி! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Last Updated: புதன், 26 ஜூன் 2019 (15:46 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நடிகர் சூர்யா ‘என்ஜிகே ‘ படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில்  காப்பான் படத்தில் நடித்துவருகிறார்.  


 
சமீபத்தில் வெளிவந்த காப்பான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்புகள்   விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் , நடிகை சாய்ஷா மற்றும் அவரது கணவர் ஆர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இதில் மோகன்லால் பிரதமர் நரேந்திர மோடி வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. 


 
இந்த நிலையில்இப்படத்தின் தெலுங்கு வெளியிட்டு அறிவிப்பை பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி நாளை (ஜூன் 27) காலை 10.30 மணிக்கு அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :