செல்வராகவனின் அடுத்த பட ஹீரோ இவர் தான்! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Last Updated: புதன், 26 ஜூன் 2019 (16:10 IST)
மக்களுடன் மனரீதியாகத் தொடர்புகொண்ட இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவின் ஒரு பொக்கிஷம் என்றே அழைப்பர். காரணம் தான் இயக்கம் படங்களில் அவலங்களின் அழகு, அவமானங்களின் வெடிப்பு, எதிர்த்து போராடும் துணிச்சல் என மக்கள் கோணத்தில் இருந்து பார்த்து பார்த்து தன் படைப்புகளை சாமானிய மக்களுக்கு கொண்டு சேர்ப்பார். 


 
கடைசியாக இவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த என்ஜிகே படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் சாதிக்கவில்லை மாறாக எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வசூலிலும்  மந்தத்தை தட்டியது இருந்தாலும் சூர்யா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக அமைந்தது.
 
சமீபத்தில் கூட படம் தோல்வியை தழுவியதற்கான காரணத்தையும் மக்கள் கவனிக்க மறந்த விஷயங்களையும் எடுத்துரைத்தார். இதனால் மீண்டும் ஒரு மெகா ஹிட் படத்தை கொடுத்து தான் யார் என்பதனை நிரூபிக்க நேரம் பார்த்துகொண்டிக்கிறார் செல்வராகவன். 


 
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து செல்வராகவன் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதனை நடிகர் தனுஷே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தனுஷ் - செல்வராகவன் காம்போவில் வெளிவந்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன , யாரடி நீ மோகினி போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததோடு தனுஷின் கேரியரையும் அடுத்த லெவலுக்கு கொண்டுசென்றது. எனவே மீண்டும் இவர்கள் கைக்கோர்ப்பது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :